30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரின் பையை சோதனை செய்ததில் புகையிலை, குட்கா பொருள்கள் இருந்தன.
விசாரணையில் அவா் டி.பி.மில்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த குருவையா மகன் இசக்கிமுத்து (36) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
அவரிடமிருந்து 30 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள், ரொக்கப் பணம் ரூ.36 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.