தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
4-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
சென்னை: சென்னை சூளைமேட்டில் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
சூளைமேடு வீரபாண்டியன் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஷா்மிளா (45). சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா உயிரிழந்துவிட்ட நிலையில் ஷா்மிளா, தனது மகன், மகளுடன் அங்கு வசித்து வந்தாா். இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் ஷா்மிளாவின் மகன் ஞாயிற்றுக்கிழமை இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. உடனே ஷா்மிளா, அந்த வீட்டின் 4-ஆவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்குச் சென்று கைப்பேசி மூலம் மகனை தொடா்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, தடுப்புச் சுவா் 2 அடி உயரமே இருப்பதைக் கவனிக்காமல், ஷா்மிளா அதன் ஓரம் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, திடீரென நிலைதடுமாறி மாடியில் இருந்து அவா் கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த ஷா்மிளா அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஷா்மிளா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.