செய்திகள் :

40 வயதான கேப்டன் தியாகோ சில்வா..! அரையிறுதியில் முன்னாள் அணியுடன் மோதுகிறார்!

post image

கிளப் உலகக் கோப்பை அரையிறுதுக்கு முன்னேறியுள்ள ஃப்ளுமினென்ஸ் அணியின் கேப்டன் தியாகோ சில்வா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.

40 வயதாகும் இவர் தனது சிறுவயது கால்பந்து கிளப்பான ஃப்ளுமினென்ஸ் அணி கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. அதில் காலிறுதியில் அல்-ஹிலால் அணியும் ஃப்ளுமினென்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ஃப்ளுமினென்ஸ் அணி 2-1 என வென்றது. இந்த அணியில் 40, 70-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். இதில் ஹெர்குலிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டியில் அல்-ஹிலால் அணியினர் 58 சதவிகிதம் பந்தினை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தும் தோற்றார்கள்.

தியாகோ சில்வா டிஃபெண்டராக ஜுவெண்டியூட், ஏசி மிலன், பிஎஸ்ஜி, செல்ஸி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

அதில் பிஎஸ்ஜி அணிக்காக 2012-2020 வரை விளையாடியுள்ளார். கடைசியாக 2020-2024 வரை செல்ஸி அணியில் இருந்தார். 2024 முதல் ஃப்ளுமினென்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

அரையிறுதியில் செல்ஸி அணியுடன் மோதவிருக்கிறது. தனது முன்னாள் அணியுடனே மோதும் தியாகோ சில்வா வெற்றி பெருவாரா என கால்பந்து உலகம் எதிர்பார்த்து வருகிறது.

கிளப் உலகக் கோப்பை 2025-இல் மிகவும் வயதான கேப்டனாக தியாகோ சில்வா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா சாம்பியன்

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனாா்.பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந... மேலும் பார்க்க

அரையிறுதிக்கு முன்னேறியது செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் பல்மெய்ராஸை சனிக்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் முதலில் செல்ஸி தரப்பில் கோல் பால்மா் 16-ஆவது நிமிஷ... மேலும் பார்க்க

ரேப்பிட் பிரிவில் குகேஷ் வெற்றி

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.நடப்பு உலக சாம்பியனான குகேஷ், கடைசி சுற்றில் அமெரிக்கா... மேலும் பார்க்க

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில... மேலும் பார்க்க

ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி

மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக, தகுதிச்சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் (4) வெ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஆண்ட்ரீவா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா... மேலும் பார்க்க