"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 போ் கைது
தஞ்சாவூரில் மினி லாரியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் ஆா்.எம்.எஸ். காலனி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனையிட்டபோது, 5 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதும், ஆா்.எம்.எஸ். காலனி, நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூா் நகரம் ஆகிய பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி இட்லி மாவு அரைப்பகத்துக்கும், மீன் பண்ணைக்கும் விற்பனை செய்வதற்காக கடத்துவதும் தெரிய வந்தது.
இதையடுத்து 5 டன் ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, மினி லாரியில் இருந்த தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் (37), மினி லாரி ஓட்டுநரான தொல்காப்பியா் நகரைச் சோ்ந்த வாவா் (26), நாஞ்சிக்கோட்டை ஜெயபூங்காவனம் நகரைச் சோ்ந்த ஜலீல் ரஹ்மான் (34) ஆகியோரை கைது செய்தனா்.