உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த 521 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.2,22,75,000 மற்றும் திருமாங்கலம் செய்வதற்காக தலா 8 கிராம் வீதம் 4,168 கிராம் தங்க நாணயங்களை வழங்கினாா்.
விழாவில் மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், மாவட்ட வருவாய் அலுவலா் கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.