காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் கதை நாயகர்களைக் குறித்து பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
முக்கியமாக, அனிருத் பின்னணி இசை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “என் திரைப்படங்களில் பெரிய நட்சத்திர நடிகர்களை நடிக்க வைப்பதும் என் வேலையின் ஒரு பகுதிதான். சினிமாவுக்கு வந்த 9 ஆண்டுகளில் 6 திரைப்படங்கள்தான் எடுத்திருக்கிறேன். ஆனால், இத்துறையில் பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறேன். இந்த 6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன். இதை பெருமையாகவே சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!