செய்திகள் :

Aamir Khan: ``அமீர் கானின் ஆளுமையால் என் திறமைகள் மறைக்கப்படும் என...!'' - கிரண் ராவ்

post image

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் அமீர் கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ் `லாபத்தா லேடீஸ்', `தோபி கட்' ஆகிய பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, பல பிரபல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான `லாபத்தா லேடீஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விருதுகளை குவித்து வருகிறது.

Lapatta Ladies

கிரண் ராவ் தனது திருமணம், சினிமா துறை அனுபவங்கள் மற்றும் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்திருக்கிறார். நேர்காணலில் பேசிய கிரண், "அமீர் கானை திருமணம் செய்ய விரும்பும் என் முடிவை கேட்ட எனது பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர். என் பெற்றோரின் பார்வையில் பல வாக்குறுதிகள் நிறைந்து காணப்பட்டது. நான் பல செயல்களை செய்ய விரும்பும் குணமுடையவள் என்பதை நன்கறிந்த என் பெற்றோர், பிரபல நடிகரான அமீர் கானுடைய வாழ்வின் ஆளுமையால் என்னுடைய திறமைகள் மறைக்கப்படும் என்ற அச்சத்தில் கவலை கொண்டனர்." என கூறினார்.

அமீர் கான் மற்றும் கிரண் ராவ் 2021-ல் விவகாரத்தை பதிவு செய்து, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், விவகாரத்து தங்கள் உறவை பாதிக்கவில்லை எனவும், எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார் கிரண். தனது முன்னாள் கணவர் குறித்து பகிர்ந்த கிரண், "நான் நானாக இருப்பதை அமீர் கான் எப்போதும் விரும்புகிறார். அது அவரிடத்தில் உள்ள மிக சிறந்த பண்பாகும். நானும் அமீரும் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்" என தெரிவித்தார். மிக பிரபலமானவரை திருமணம் செய்ததால் தன் அடையாளத்தை தெலைத்ததாகவும், மீண்டும் தனது சொந்த அடையாளத்தை உணரவே அமீர் கானின் நிழலில் இருந்து வெளிவந்ததாகவும் கூறினார். தனது வளர்ச்சிக்கு ஊக்கம் தந்த அமீர் கானை மிகவும் விரும்பினாலும், தன் சொந்த அடையாளத்தில் அங்கீகாரம் பெற விரும்புவதாக பகிர்ந்தார் கிரண்.

Aamir Khan & Kiran Rao

கிரண் ராவ், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்தார். தென்னிந்திய திரைப்படங்களில் கருத்துக்கள் மிகுந்த கதைகளை அதிகம் காண்பதாக சொல்லியிருக்கிறார் கிரண். இதுகுறித்து பேசிய அவர், "நான் மலையாள படங்கள் அதிகம் கண்டுள்ளேன். அந்த திரைப்படங்கள் சொல்லும் திடமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எப்போதும் வியப்படைந்துள்ளேன். புதுமையான கருத்துடைய படங்களை தென்னிந்திய சினிமா யோசிக்காமல் தயாரிக்கிறது. பார்வையாளர்கள் விரும்புவதற்கு ஏற்ப சிறந்த கதைகளை உருவாக்கி, தனக்கென தன்னிகரற்ற ஆதரவை தென்னிந்திய சினிமா கொண்டுள்ளது." என கூறினார்.

Dhanush: ``தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று; இதுவும் லவ் ஸ்டடோரிதான்'' - கிர்த்தி சனூன்

தனுஷ் நடிப்பில் உருவாகும் `தேரே இஷ்க் மெயின் (Tere Ishq Mein)' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. `ராஞ்சனா', `Atrangi Re' திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்... மேலும் பார்க்க

Anurag: "என்னைத் தொந்தரவு செய்த அந்த நபர்; அதிலிருந்து மும்பையில் இருப்பதில்லை" - அனுராக் காஷ்யப்

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடை... மேலும் பார்க்க

ரஜினி கால்ஷீட் கிடைப்பதில் சிக்கலா... அட்லீயின் ரூ.650 கோடி பட்ஜெட் சல்மான் கான் படம் ஒத்திவைப்பு?

இந்தியில் ஜவான் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லீ அடுத்ததாக இந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரூ.650 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருந்தார். இப்படத்தில் சல்மான் கான் மட்டுமல்லா... மேலும் பார்க்க

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' - ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன... மேலும் பார்க்க

Sonakshi Sinha: ``என் கணவர் அவரது மதத்தைத் திணிக்கவில்லை''- சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, 2010 ஆம் ஆண்டு 'டபாங்க்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில், 'லிங்கா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏழு ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரான ஜாகீர் இக்பால... மேலும் பார்க்க

மன்னத் பங்களாவை காலி செய்து ரூ.24 லட்சம் வாடகையில் புதிய வீட்டில் குடியேறும் நடிகர் ஷாருக்கான்!

மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி இருக்கும் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மன்னத் பங்களா ஒரு செல்பி எடுக்கும் இடமாக இருக்கிறது. இந்த பங்களாவை ஷாருக்கான... மேலும் பார்க்க