செய்திகள் :

AMMA: "விமர்சனங்களைத் தைரியமாகச் சொல்லுங்க" - கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்

post image

மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) தலைவர் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நேற்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், நடிகர் தேவனை (132 வாக்குகள்) எதிர்த்து 159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2024ஆம் ஆண்டு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற பிரச்னைகள் காரணமாக மொத்தமாக நடிகர்கள் பொறுப்புகளிலிருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து முக்கிய நடிகர்கள் பலரும் தலைவர் போட்டியில் பங்கெடுக்காமல் விலகிவிட்டனர்.

நடிகை ஸ்வேதா மேனன்
நடிகை ஸ்வேதா மேனன்

இந்நிலையில் ஸ்வேதா மேனன், AMMA-வை விட்டு விலகிய பெண் நடிகைகளை மீண்டும் அழைத்து ஒருங்கிணைப்பதாகவும், Women in Cinema Collective (WCC) உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியிருந்தார்.

ஸ்வேதா மேனன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் தாண்டி தற்போது வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

வெற்றிபெற்றது குறித்துப் பேசியிருக்கும் ஸ்வேதா மேனன், "அம்மா நடிகர்கள் சங்கத்தின் ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இப்போது பெயருக்கு ஏற்றவாறு அம்மாவாக, பெண்ணாக மாறிவிட்டது, இப்போதுதான் முதல்முறையாக பெண் தலைமையேற்கிறது சங்கம்.

ஸ்வேதா மேனன்

சினிமாவை பொறுத்தவரை, ஆண், பெண் வேறுபாடு இல்லை என்று நான் நம்புகிறேன்; சினிமாவில் நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்தான். எந்தக் கேள்விகளையும், விமர்சனங்களையும் தைரியமாக என்னிடம் முன்வையுங்கள். நான் நேர்மையுடன் இப்பொறுப்பில் பணியாற்றுவேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'Miss India, மாநில விருது, பிக்பாஸ்' - கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன் யார்?

கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 31 ஆண்டுக்கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் பெண் ஒருவர் ... மேலும் பார்க்க

AMMA: "ஆபாசக் குற்றச்சாட்டுகளைக் கேட்டால் என் மகள்களின் மனநிலை என்னவாகும்?" - நடிகை ஸ்வேதாவின் கணவர்

மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) தலைவர் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2024ஆம் ஆண்டு வெளியான ஹே... மேலும் பார்க்க

Fahad Fazil:"பகத் பாசில் ரூ.65,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில்"- தயாரிப்பாளர் ஸ்டீபன்

மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் லிஸ்டின் ஸ்டீபன். பகத் பாசிலின் சினிமா பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்த 'Chaappa Kurishu' படத்தைத் தயாரித்தவர். ஆரம்பத்தில் பகத் பாசில் நடித... மேலும் பார்க்க

Malavika Mohanan: "'மாஸ்டர் படத்துல ரொம்ப அழகா இருந்தீங்க'னு ரஜினி சார் சொன்னார்"- மாளவிகா ஓபன் டாக்

தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்', விக்ரமுடன் 'தங்கலான்' படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.தமிழில் அவ்வப்போது நடித்தாலும், மலையாளத் திரையுலகில் இப்போது முழு கவனம் செலுத்தி பி... மேலும் பார்க்க

Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி இருக்கிறது மீஷா?

மிதுனும் (கதிர்) அனந்துவும் (ஹக்கீம் ஷா) இணை பிரியாத நண்பர்கள். ஜிகிரி தோஸ்தாக இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய ஊரில் அரசியல் பிரமுகராக இருக்கும் ரகுவுக்கு (ஜியோ பேபி) விஸ்வாசமாக இருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

DQ: "எனக்குப் பிரச்னை என்றால் முதலில் வருவது நீங்கள்தான்" - துல்கர் சல்மான் குறித்து நடிகை கல்யாணி

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாள் இன்று. மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாகப் பல ஹிட் படங்கள் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக, துல்கர் கடைசியாக நடித்திரு... மேலும் பார்க்க