BCCI: ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி? - பஹல்காம் தாக்குதல்தான் காரணமா?
ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ ( இந்திய கிரிக்கெட் வாரியம்) முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.
மே 10 ஆம் தேதி மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ ( இந்திய கிரிக்கெட் வாரியம்) முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பொறுப்பு வகித்து வருகிறார்.
இதன் காரணமாக, ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் இருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இலங்கையில் மகளிருக்கான Emerging ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பிலிருந்து ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...