செய்திகள் :

Bigg Boss Tamil 8: இந்த வாரம் `அவுட்’ ஆன இரண்டு பேர் - ஏமாற்றத்துடன் வெளியேறிய பெண் போட்டியாளர்?

post image
பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு ஆறு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இணைந்தனர்.

24 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் கடந்த வாரம் வரை 12 பேர் வெளியேறியிருந்தனர். மீதி 12 பேர் இருக்க, இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. தற்போது வரை ஷூட் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் குறித்த தகவல் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது.

அதன்படி நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்களிலேயே மக்கள் ஓட்டுகள் அடிப்படையில் குறைவாக ஓட்டு வாங்கிய அன்ஷிதாவும் ஜெஃப்ரியும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்களாம்.

ஜெஃப்ரி

அன்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற போது ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இவருடன் இணைத்து மீடியா செய்திகளில் அடிபட்ட அர்னவும் பிக்பாஸுக்குள் சென்றார். எனவே இவர்கள் இருவரையும் வைத்து கன்டென்ட் கிடைக்குமென பேசினார்கள். ஆனால் அர்னவ் ஒருசில வாரங்களிலேயே எவிக்ட் ஆகி வெளியேறி விட்டார்.

மேலும் அன்ஷிதாவுமே பணப்பெட்டி டாஸ்க் வரை நிகழ்ச்சியில் நீடித்தால் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறும் ஒரு முடிவில் ஆரம்பத்திலிருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்தும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது பணப்பெட்டி வைக்கப்படும் முன்னரே எவிக்ட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அன்ஷிதா

ஜெஃப்ரியைப் பொறுத்தவரை பிக்பாஸ் வீட்டுக்குள் பெண் போட்டியாளர்களிடம் பழகுவதிலேயே முக்கால்வாசி நேரத்தைக் கழித்து வந்தார் என்று சொல்லலாம். எனவே இத்தனை நாள் இருந்ததே சாதனைதான் என்கிறார்கள்.

இந்த சீசன் தொடங்கியது முதல் இதுவரை இரண்டு முறை டபுள் எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ள நிலையில் இடந்த வாரமும் இரண்டு பேர் அவுட் ஆகியுள்ளனர். இவர்களில் அன்ஷிதா வெளியேறிய எபிசோடு இன்றே ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜெஃப்ரி எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாம்.!

BBTAMIL 8: DAY 83: ஜெப்ரி வெளியேற்றம்; கண்ணீர் விட்டு கலங்கிய அன்ஷிதா, சவுந்தர்யா

ஜெப்ரி வெளியேற்றப்பட்டது, இதர போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, கணிசமான பார்வையாளர்களுக்கு கூட சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும். கலைத்திறமை உள்ளவர்கள் எதற்காக இந்த ஷோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்... மேலும் பார்க்க

BB Tamil 8: `அதை முத்துக்குமரன் சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துருப்போம்; ஆனா..!" - மஞ்சரி ஃபேமிலி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபீரிஸ் டாஸ்க் நடைபெற்றது.போட்டியாளர்களின் குடும்பமும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு சின்ன சின்ன அட்வைஸ் பாயிண்ட்களைக் கொடுத்தனர். அதில் செ... மேலும் பார்க்க

BB TAMIL 8 DAY 82: `காதல்' மொமென்ட்ஸ், மகேஷின் எழுச்சியுரை... யார் எடுப்பார் பணப்பெட்டியை?!

குடும்பச் சந்திப்பு முடிந்து நண்பர்களின் சந்திப்பு இந்த எபிசோடில் துவங்கியது. (இன்னும் அக்கம் பக்கத்து வீட்ல இருந்து யாராவது இருக்கீங்களா?!) இது காதலர்களின் சந்திப்பாகவும் மாறியது. சவுந்தர்யா நிகழ்த்த... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஷோவை சுற்றி வரும் முரட்டு நம்பிக்கைகள்... போட்டியாளர்களை அசைத்துப் பார்க்கிறதா?

பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ர... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில...' - பிக் பாஸ் வீட்டில் ஈரோடு மகேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்தை கிள்ளாதே' நடிகை

வாழ்த்துகள் மதுமிதா - விஷ்ணு ஜோடிஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் மதுமிதா இளையராஜா. இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே ... மேலும் பார்க்க