செய்திகள் :

Coolie: "விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது; ஆனால்...” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

post image

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கூலி
கூலி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று (ஜூலை 28) கோவையில் தான் படித்த கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "விஜய் இல்லாமல் LCU (Lokesh Cinematic Universe) முழுமை பெறாது. ஆனால், அவர் உள்ளே வருகிறாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

இன்றைக்கு அவருடைய எண்ணம் என்னவாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய முயற்சி எதை நோக்கி இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அவர் இல்லாமல் LCU நிறைவானதாக இருக்காது" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Madharasi: 'I'm Waiting சொன்னவருக்கேவா?'; அனிருத் இசையில் சாய் அபயங்கர் - மதராஸி முதல் பாடல் எப்போ?

5 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழில் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் ஆ... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" - இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். ... மேலும் பார்க்க

Coolie: "இங்குதான் என் பயணம் ஆரம்பித்தது" - கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங... மேலும் பார்க்க