செய்திகள் :

ENG vs IND: மீண்டும் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்; கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு; கில் கூறுவது என்ன?

post image

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது.

இங்கிலாந்து அணி 2 - 1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இத்தொடரை இங்கிலாந்து கைப்பற்றுமா அல்லது இந்தியா சமன் செய்யுமா என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக ஓவல் டெஸ்ட் அமைந்தது.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

இப்போட்டியை டிரா செய்தாலே தொடரை இங்கிலாந்து கைப்பற்றும் எனும் சூழலில் காயம் காரணமாக கடைசி போட்டியிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்குப் பதில், ஒல்லி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மேலும், கடந்த போட்டியில் ஆடிய லியாம் டாசன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங் ஆகியோர் பிளெயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறான சூழலில், ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கடைசி போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஒல்லி போப், "கொஞ்சம் மேகமூட்டமாக இருக்கிறது. கேப்டன் இல்லை, அதேசமயம் சில புதுமுகங்கள் எங்களிடம் இருக்கின்றனர்.

நல்ல பேட்டிங் இருக்கிறது. கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் நல்ல ரன்கள் வைத்திருக்கிறார்கள்.

2 - 2 என ஆடப்போவதில்லை. நாங்கள் வெற்றிபெற ஆடப்போகிறோம்." என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப்
இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப்

அவரைத்தொடர்ந்து இந்திய கேப்டன் சுப்மன் கில், "போட்டியில் வெற்றி பெறும் வரை டாஸை இழந்தாலும் கவலையில்லை.

என்ன செய்வது என்பதில் நேற்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

வானம் மேகமூட்டமாக இருக்கிறது. அதேசமயம் பிட்ச் நன்றாக இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் நல்ல ரன்களை எடுக்க நாங்கள் முயற்சிப்போம். பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பிட்சாக இருக்கும்.

இந்திய கேப்டன் சுப்மன் கில்
இந்திய கேப்டன் சுப்மன் கில்

பண்ட், ஷர்துல், பும்ராவுக்குப் பதில் துருவ் ஜோரல், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.

அதற்கான அனைத்தையும் எங்கள் வீரர்கள் செய்வார்கள்" என்று கூறினார். (அணியில் இன்னொரு மாற்றமாக அன்ஷுல் கம்போஜுக்குப் பதில் ஆகாஷ் தீப் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்).

இங்கிலாந்து பிளெயிங் லெவன்:

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்

இந்தியா பிளெயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட ... மேலும் பார்க்க

`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.யுஸ்வேந்திர சஹால் - ... மேலும் பார்க்க

Chahal: `தினமும் இரண்டு மணிநேரம் அழுவேன்; தூக்கமே வராது’ - விவாகரத்து குறித்து சஹால்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.விவாகரத்துநடிகை, நடன... மேலும் பார்க்க

Ind vs Eng: `க்ரீன் பிட்ச்; ஓவல் டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?’ - கில் முடிவு தான் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பும்ரா பிளேயிங் 11ல் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு... மேலும் பார்க்க

ENG vs IND: 'நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!' - சுனில் கவாஸ்கர் காட்டம்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில்`, ஹரி ப்ரூக், பென் டக்கெட் போன்ற பகுதி நேர பவுலர்களுக்கு எதிராக விளையாடித்தான் நீங்க... மேலும் பார்க்க

Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரும் பத்திரிகையாளர்

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள், பவுலர்களைத் தாண்டி இரண்டு ஆல்ரவுண்டர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர்.ஒருவர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இன்னொருவர் இந்திய வீரர் ரவீந்திர ... மேலும் பார்க்க