Good Bad Ugly: "ஆலுமா டோலுமா மாதிரி பண்ணணும்னு ஆதிக் சொன்னாரு" - GBU பாடலாசிரியர் ரோகேஷ் பேட்டி
`குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான `GBU மாமே' குறித்தான பேச்சுதான் சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது நிரம்பியிருக்கிறது.
படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.
இந்த இரண்டாவது பாடலை அஜித்தின் மற்றொரு தீவிர ரசிகரான பாடலாசிரியர் ரோகேஷ் எழுதியிருக்கிறார்.

இதற்கு முன் அஜித்துக்கு `அலுமா டொலுமா' என்ற ஹிட் பாடலைக் கொடுத்தவர் தற்போது இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
அந்தப் பாடலைப் போலவே இந்த `GBU மாமே' பாடலையும் அனிருத் பாடியிருக்கிறார். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த ரோகேஷைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
நம்மிடையே பேசிய அவர், ''மறுபடியும் அஜித் சார்கூட பாட்டு அமைஞ்சிருக்கு. மக்கள்கிட்ட இருந்தும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. `ஆலுமா டொலுமா' பாடலைத் தொடர்ந்து மறுபடியும் அனிருத் ப்ரதர் இந்த `GBU மாமே' பாடலைப் பாடியிருக்கார்.
`ஆலுமா டொலுமா' பாடலைத் தொடர்ந்து இந்தப் பாடல் எனக்கு அமைஞ்சது ரொம்பவே சந்தோஷம். படக்குழுவினருமே `ஆலுமா டொலுமா' மாதிரியான ஸ்டைலான பாடல்தான் கேட்டாங்க.
அந்தப் பாட்டை மைண்ட்ல வச்சுதான் கேட்டாங்க. `வேதாளம்' மாதிரியே இந்தப் படத்துலயும் அவர் ஒரு கேங்ஸ்டர்.

எழுதுறப்போ எனக்கு அதே மாதிரியான விஷயங்கள்தான் இருந்தது. பாடலை எழுதுறதுக்கு ரொம்பவே கம்ஃபோர்ட்டாக இருந்தது.
படக்குழுவுல இருந்து முதல்ல `தீனா, பில்லா, மங்காத்தா'ங்கிற பெயரைப் பயன்படுத்தலாம்னு சொன்னாங்க. இதே மாதிரி பல இன்புட்ஸும் எனக்குக் கொடுத்தாங்க.
இயக்குநர் ஆதிக் சாரும் அஜித் சாருடைய மிகப்பெரிய ரசிகர். இந்தப் பாடலை எழுதும்போதே ` மறுபடியும் ஆலுமா டொலுமா மாதிரி இந்தப் பாடலை பண்ணலாம்'னு சொன்னாரு.
இந்தப் பாடல் எழுதினதுக்குப் பிறகு அவரும் நல்ல கமென்ட்ஸ் கொடுத்தாரு. இப்போவரைக்கும் `ஆலுமா டொலுமா' பாடல்தான் என்னை அடையாளப்படுத்துது. பலரும் நீங்கதான் அந்தப் பாட்டை எழுதுனீங்களானு ஆச்சரியமாகக் கேட்பாங்க.
என்கிட்ட பேசுற அத்தனை பேரும் கண்டிப்பாக `ஆலுமா டொலுமா' பாடலைப் பத்தி கண்டிப்பாகப் பேசிடுவாங்க. அந்தப் பாடல் பல மேஜிக்குகளை என் லைஃப்ல உருவாக்கியிருக்கு.
அடுத்தடுத்த பாடல்கள் எழுதும்போதும் `ஆலுமா டொலுமா மாதிரி ஒண்ணு பண்ணுங்க'னுதான் கேட்பாங்க.

அதனால பல வாய்ப்புகள் கிடைச்சு இன்னைக்கு வரைக்கும் சர்வைவ் ஆகுறேன். நானுமே பெரிய அஜித் சார் பேன். எங்க ஏரியாவுல எல்லோருமே அஜித் ரசிகர்கள்தான்.
அந்த வைப்ல எனக்கும் `அட்டகாசம்' படம் பயங்கரமாகப் பிடிச்சு அவருடைய ரசிகராக மாறிட்டேன். அஜித் சார் என்னுடைய பாடல்களை எந்தளவுக்கு என்ஜாய் பண்ணுவார்னு சொல்வாங்க.
நானும் அவரை நேர்ல மீட் பண்றதுக்குதான் முயற்சி பண்ணீட்டு இருக்கேன். பார்ப்போம்" எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...