கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
Kerala Mass Murder: கேரளாவை உலுக்கிய கொலைகள்; கைதான இளைஞன் சிறையில் தற்கொலை முயற்சி; என்ன நடந்தது?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சாறமூடு பேருமல பகுதியைச் சேர்ந்தவர் அஃபான்(23). இவர் தனது பாட்டி சல்மா பீவி (88), தனது தம்பி அப்ஸான் (13), சித்தப்பா லத்தீப் (69), லத்தீப்பின் மனைவி ஷாஹிதா (59), தனது காதலி பஃர்ஷானா (19) ஆகியோரைக் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சுத்தியலால் அடித்துக் கொலைசெய்தார்.
அஃபானின் தாக்குதலில் காயமடைந்த அவரது தாய் ஷெமினா (40) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
5 பேரைச் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, தாயைக் கொலை செய்யும் நோக்கில் கொடூரமாகத் தாக்கிவிட்டு, அவர் இறந்துவிட்டார் என நினைத்து வெளியேறிவிட்டார்.
பின்னர் எலி விஷம் சாப்பிட்டுவிட்டு வெஞ்சாறமூடு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். அஃபானை அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துக் காப்பாற்றினர்.

அஃபானின் அப்பா ரஹீம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். பணப் பிரச்னை காரணமாகவும், உறவினர்களிடம் பணம் கடன் கேட்டபோது கொடுக்காததாலும் கொடூர கொலையை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொடூர காட்சிகள் நிறைந்த சினிமாக்கள் பார்க்கும் வழக்கம் கொண்ட அஃபான் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கின் விசாரணை நடந்துவரும் நிலையில் அஃபான் திருவனந்தபுரம் பூஜப்புரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஃபான் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறைக் காவலர் போன் பேசச் சென்ற சமயத்தில், துவைத்துக் காயப்போட்டிருந்த வேட்டியை எடுத்து கழிவறையில் வைத்து தூக்கில் தொங்கியுள்ளார் அஃபான்.
அப்போது காவலர்கள் பார்த்ததைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூளைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் வெண்டிலேட்டரில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.