செய்திகள் :

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஈரான் அயதுல்லா அலி கமேனியை பாதுகாப்பான இடத்துக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் சமூக வலைதளப்பக்கத்தில், ``ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இருப்பிடத்தை அமெரிக்கா அறிந்திருக்கிறது. ஆனால் அவரை இப்போதைக்கு குறிவைக்கப் போவதில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஈரான்

இந்த நிலையில், ஈரான் நேற்று தன் நாட்டு மக்களிடம், ``ஸ்மார்ட்போன்களிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்குங்கள். நம் தரவுகள் இஸ்ரேலுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது" எனக் கோரிக்கை வைத்தது.

ஈரானின் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவைகளை நிர்வகிக்கும் மெடா நிறுவனம், ``எந்தவொரு அரசுக்கும் எந்தத் தகவலையும் நாங்கள் வழங்கவில்லை. இந்தத் தவறான அறிக்கைகள் மூலம் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படும் எங்கள் சேவைகள் தடுப்பதற்குதான் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு.

எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பேச்சுகளை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கிறது, இது சேவை வழங்குநர்கள் உட்பட மூன்றாம் தரப்பினருக்கு செய்திகள் அணுக முடியாததை உறுதி செய்கிறது என்று அது விளக்கியது. உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை, எல்லோரும் செய்தி அனுப்புகிறார்கள் என்ற பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை, மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை" என பதிலளித்திருக்கிறது.

"நீங்கதான் பெஸ்ட்; உங்களைப் போல நானும்..." - இணையத்தில் வைரலாகும் மோடி, மெலோனி உரையாடல் வீடியோ

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர சந்திப்பான G7 உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நேற்று முன்தினம் (ஜூன் 16... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க