செய்திகள் :

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - பின்னணி என்ன?

post image

2022-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை.

ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தது.

அதே நேரம் "இந்தியா அமைதியின் பக்கம் உறுதியாக நிற்கிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம்தான் இந்தப் போருக்கு முக்கியப் பொருளாதாரம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார்.

ஜெலென்ஸ்கி - மோடி
ஜெலென்ஸ்கி - மோடி

மேலும், இந்தியா மீது 50% வரியும் விதித்திருக்கிறார். இந்த நிலையில், ரஷ்யா - சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், Shanghai Cooperation Organisation (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விதமாக சீனாவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, உக்ரைனில் அமைதியான தீர்வு ஏற்படுவதற்கான இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உக்ரைனில் நிலவிவரும் சமீபத்திய சூழல்கள் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ``அங்கு விரைவில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று வலியுறுத்தினார்" என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த உரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம... மேலும் பார்க்க

NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்க... மேலும் பார்க்க

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க