செய்திகள் :

Praggnanandhaa: நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

post image

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 39 நகர்வுகளில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்.

Praggnanandhaa
Praggnanandhaa

மேலும் அவர் ஃப்ரீஸ்டைல் செஸ் லாஸ் வேகாஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தி இருக்கிறார். இதேபோல், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி-யும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் குரூப் ஒயிட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் எரிகைசி குரூப் பிளாக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பிரக்ஞானந்தாவிடம் தோல்வியைத் தழுவிய ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், குரூப் ஒயிட்டில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால், லாஸ் வேகாஸ் பட்டத்திற்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். காலிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. அனைத்து நாக் அவுட் போட்டிகளும் கிளாசிக்கல் 30 + 30 என நேரம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று போட்டிகளை வென்றுள்ள பிரக்ஞானந்தா, இப்போது கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 200,000 அமெரிக்க டாலர் முதல் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவருடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார். சாய்னா நேவாலுக்கும், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபள்ளி காஷ்யபுக்கும் கடந்த 2018-ம்... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலம்

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய ... மேலும் பார்க்க

Dhoni: 'இளமைக் குறும்பு; கேமரா காதலன்!' - தோனியின் விகடன் க்ளிக்ஸ்!

Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவண... மேலும் பார்க்க

Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்?

'தோனியின் பிறந்தநாள்!'தோனி, இந்திய கிரிக்கெட்டின் ஆச்சர்ய பெயர் இது. தோனியின் மீதான ரசிகர்களின் கொண்டாட்டமும் ஈர்ப்பும் ஒவ்வொரு முறையும் பிரமிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்... மேலும் பார்க்க

'என் அக்காவுக்காகதான் எல்லாமே...' - கேன்சரால் பாதிக்கப்பட்ட சகோதரி குறித்து உருகிய ஆகாஷ் தீப்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ்... மேலும் பார்க்க

Eng v Ind : 'அந்த 2 இடத்துலதான் கோட்டை விட்டுட்டோம்!' - தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ்!

'இங்கிலாந்து தோல்வி!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்க... மேலும் பார்க்க