செய்திகள் :

SAIYAARA: "இந்தத் திரைப்படம் உண்மையிலேயே இந்தி சினிமாவின் STARதான்" - பாராட்டிய ஜோதிகா

post image

பாலிவுட் இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'SAIYAARA'.

இந்தியாவில் இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 20 கோடி. புதுமுகங்கள் நடித்து வெளியான ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதன் முறை. 2025ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திப் பட வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

ஜோதிகா
ஜோதிகா

புதுமுகங்கள் மட்டுமே நடித்து வெளியான ஒரு படம் சூப்பர் ஸ்டார் படங்கள் அளவுக்கு வசூல் செய்வதுதான் இப்போது இந்திய சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜோதிகா `Saiyaara' படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சண்டை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள், ஐட்டம் சாங் என வெளிவரும் படங்களுக்கு மத்தியில், உணர்வுகளையும், இசையையும், தேர்ந்த எழுத்தையும் கொண்டு வந்திருக்கிறது SAIYAARA திரைப்படம்.

'SAIYAARA'
'SAIYAARA'

இந்த ஆழமான கதைக்காகவும், மனதைக் கவரும் திரைக்கதைக்காகவும் சகோதரர் சங்கல்ப் சடானாவை பெருமையாக நினைக்கிறேன். மோஹித் சூரி, அனீத், அஹான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உண்மையிலேயே இப்படம் இந்தி சினிமாவின் STAR தான்" என்று பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மும்பை : நடிகர் ஆமீர் கான் இல்லத்திற்கு திடீரென படையெடுத்த 25 ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் நடித்து வெளியான சிதாரே ஜமீன் பர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை ஒ.டி.டி தளத்தில் வெளியிட ரூ.120 கோடி கொடுப்பதாக ஒ.டி.டி தளங்கள் கூறியபோதிலும் திய... மேலும் பார்க்க

Sarzameen: ``மோகன்லாலைப் போலவே கஜோல்.." - `சர்ஜமீன்' குறித்து அனுபவம் பகிரும் நடிகர் பிருத்விராஜ்

இயக்குனர் கயோஸ் இரானி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் - கஜோல் நடிப்பில் வெளியானப் படம் 'சர்ஜமீன்'. கடந்த வாரம் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது.இந்தப் படத்தில் நடிகை கஜோலுடன் நடித்த அனுபவத்தை பிருத்விராஜ் த... மேலும் பார்க்க

பழ ஜூஸ், சோள ரொட்டி, சூப்! உடற்பயிற்சி இன்றி 26 கிலோ குறைத்தது எப்படி? - ரகசியம் பகிரும் போனி கபூர்

பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர். அதிக உடல் எடையுடன் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போனி கபூர் தனது தலையில் புதிய முடிகளை செ... மேலும் பார்க்க

'என்னால் 12 மணிநேர ஷிஃப்ட்டில் பணிபுரிய முடியும், ஆனால்...'- தீபிகா படுகோன் குறித்து வித்யா பாலன்

8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். அப்போது பாலிவுட்டில் அது பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பி... மேலும் பார்க்க

அனுராக் காஷ்யப்: "விவாகரத்து செய்ய இதுதான் காரணம்" - முன்னாள் மனைவி கல்கி கோச்லின் ஓபன் டாக்

'Dev.D', 'Gangs of Wasseypur', 'Black Friday' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். Dev.D படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை கல்கி கோச்லினை 2011ஆம் ஆண்... மேலும் பார்க்க

SRK: 'கிங்' படப்பிடிப்பு ஒத்திவைப்பு; சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மே மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. மும்பை படப்பிட... மேலும் பார்க்க