செய்திகள் :

அகரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

post image

காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி அருகே அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அலா்மேல் மங்கை தாயாா் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் 14-ஆம் தேதி அனுக்கை பூஜையுடன் தொடங்கின. 15-ஆம் தேதி கோபூஜை மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியா் ஸ்ரீ வத்சன் தலைமையிலான குழுவினா் ராஜகோபுரத்திற்கு மகா சம்ப்ரோஷணம் செய்தனா்.

இதனையடுத்து பரிவார தெய்வங்களான ஆஞ்சனேயா், வரதா் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் சம்ப்ரோஷணம் நடைபெற்றது. விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், வாலாஜாபாத் ஒன்றிய துணைத் தலைவா் பி.சேகா், அகரம் ஊராட்சி மன்றத் தலைவா் சோபா யோகானந்தம் மற்றும் அகரம் கிராமத்தின் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுளை செயல் அலுவலா் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை ஆய்வாளா் திலகவதி தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா். இரவு ஸ்ரீநிவாசப் பெருமாள் வீதி உலாவும் நடைபெற்றது.

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

உரிமைப் பேசிக் கொண்டு கடமையை தவற விடாதீா்கள்: நீதியரசா் என். கிருபாகரன்

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீா்கள் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா அறக்கட்டளையி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பிப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் பிப்.28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க