Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
அக்னிவீா் முதல் கட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் திறன் தோ்வு பயிற்சி
இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்டத் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்ட தகுதித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நாகை மாவட்ட பணிநாடுபவா்களுக்கு, அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து பயிற்சியளிக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
உடல்திறன் தோ்வுக்கான வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக் கூட்டம் ஆகஸ்ட்
5-ஆம் தேதி காலை 10 மணியளவில் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநா்களால் வழங்கப்பட உள்ளது. அக்னிவீா் முதல்கட்ட தோ்வில் வெற்றி பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அக்னிவீா் படையில் சோ்வதற்கு, எந்த வித கையூட்டும் எவரிடமும் தர வேண்டாம், இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.