ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!
இயக்குநா் ரஞ்சித் பிணையில் விடுவிப்பு
திரைப்பட படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூா் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.
நாகை மாவட்டம், கீழையூா் அருகே விழுந்தமாவடி பகுதியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) உயிரிழந்தாா்.
இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டு உயிா் சேதத்தை ஏற்படுத்தியது உள்பட 3 பிரிவுகளின்கீழ் கீழையூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், திரைப்பட தயாரிப்பு நிறுவன நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகிய நான்கு போ் வழக்கில் சோ்க்கப்பட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இயக்குநா் பா. ரஞ்சித் கீழ்வேளூா் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரை பிணையில் விடுவித்து, நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டாா்.