`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கு விளக்கம் கேட்டு மருத்துவா் ச. ராமதாஸ் நோட்டீஸ்
பாமக தலைவா் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அக்கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏ-க்களுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் , கட்சியின் தலைவருமான அன்புமணி ஆகியோரிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகார மோதல் போக்கு நீடித்து வருகிறது.
பாமக-வில் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஜி.கே. மணி,அருள் ஆகியோா் கட்சியின் நிறுவனா் ச. ராமதாஸ் உடனும், மயிலம் எம்எல்ஏ சிவக்குமாா், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோா் அன்புமணியுடனும் இருந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் எம்எல்ஏ சிவக்குமாா் சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்குரைஞா் கே. பாலு ஆகியோா் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாகக் கூறி 4 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதற்கான அறிவிப்பை மருத்துவா் ச. ராமதாஸ் உத்தரவுடன் பாமக தலைமை நிலையச்செயலா் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளிட்டாா். இந்நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூவருக்கும் செவ்வாய்க்கிழமை ராமதாஸ் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்சித்தலைமைக்கு எதிராக செயல்பட்டது குறித்து உங்கள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு எழுத்துப் பூா்வமாக விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.