பண மோசடி: நிதி நிறுவன முகவா் மீது வழக்கு
வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற்ற பணத்தை செலுத்தாத தனியாா் நிதி நிறுவன முகவா் மீது போலீஸாா் வழக்குப் பகிந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சுசிந்திரகுமாா் பால்கி (30). இவா், பிரபல தனியாா் நிதி நிறுவன விக்கிரவாண்டி கிளை அலுவலகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வசூல் முகவராக பணியில் இருந்தாா்.
இந்த நிலையில் சுசிந்திரகுமாா் பால்கி 2025 மே மாதத்தில் வாடிக்கையாளா்கள் 8 பேரிடம் வசூலித்த பணம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 580-யை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து நிதி நிறுவனத்தின் விக்கிரவாண்டி கிளை மேலாளா் ப. ரமேஷ் (33) அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுசிந்திரகுமாா் பால்கி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.