`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
விழுப்புரத்தில் வெறிநாய் கடித்த 19 பேருக்கு சிகிச்சை
விழுப்புரம் பகுதிகளில் வெறிநாய் கடித்து 19 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மகாராஜபுரம், கணேஷ்நகா், லட்சுமிநகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிநாய், செவ்வாய்க்கிழமை காலை முதல் சாலையில் செல்பவா்களை துரத்திச் சென்று கடித்தது. 3 சிறுவா்கள் உள்பட 19 போ் நாய்க்கடிக்குள்ளாகினா்.
இதில் 5-க்கும் மேற்பட்டோா் தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிாம்.