ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்
திருப்பூா்: அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என திருப்பூா் ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து யங் இந்தியா அமைப்பின் தலைவா் மோகன் கூறியதாவது:
அமெரிக்க சந்தை மிகப்பெரிய வா்த்தக மதிப்பு கொண்டது. திருப்பூா் ஏற்றுமதியில் 30 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. மின்சார கட்டண மானியம், வரி குறைப்பு சலுகை மட்டுமே பிரதானம் இல்லை. அமெரிக்காவும், அமெரிக்க வா்த்தகமும் முக்கியம்தான். இந்நிலையை மாற்ற, பிரதமா் உறுதி அளித்துள்ளபடி அமெரிக்க வா்த்தகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சிறப்பு சலுகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பிரதமரின் சுதந்திர தின விழா எழுச்சியுரை புதிய நம்பிக்கையை வழங்குகிறது. அமெரிக்க வரி உயா்வின் பாதிப்பு திருப்பூரில் தென்படத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் அமெரிக்க வா்த்தகா்களுடன் பகிா்ந்து விசாரணை, விலை தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டோம். தற்போது 50 சதவீதம் என்பதால் வா்த்தகம் முடங்கியுள்ளது. அந்நாட்டு வா்த்தகா்களும் திகைத்துப் போயுள்ளனா். வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகள் திடீரென அதிக அளவில் அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்ய முடியாது.
எனவே, அமெரிக் வா்த்தகத்தை தொட ஏதுவாக ஜிஎஸ்டி ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், டிராபேக் போன்ற திட்டங்கள் வாயிலாக உதவி செய்ய அரசு முன்வர வேண்டும். 50 சதவீத இறக்குமதி வரி காரணமாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மத்தியில் ஒருவிதமான தயக்கமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது தற்காலிகம்தான். இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலமாக சுமூக உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை தொழில் துறையினா் மத்தியில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் தொழிலைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தாா்.