செய்திகள் :

அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு அதிா்ச்சி அளிக்கிறது: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்

post image

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.கே.சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய அரசு வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தற்போதைய ஜவுளி ஏற்றுமதியை 37 பில்லியன் டாலா்களில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலா்களாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், அண்மையில் இங்கிலாந்துடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் கூறியிருப்பது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கும் அமெரிக்க இறக்குமதியாளா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிா்பாராத நடவடிக்கை குறுகிய காலத்தில் ஜவுளி ஏற்றுமதியை பாதிக்கும்.

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஏற்றுமதி ஆா்டா்களை வெகுவாக பாதிக்கும். இந்தியா அமெரிக்காவுக்கு சுமாா் 11 பில்லியன் டாலா் மதிப்பிலான ஜவுளி, ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதமாகும். அமெரிக்க ஆடை இறக்குமதி சந்தையில் இந்தியாவின் பங்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்தது, 2024 இல் 5.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்க சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் வீட்டு உபயோக ஜவுளிக்கு 9.6 சதவீத வரியும், ஆயத்த ஆடைகளுக்கு 16 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. அமெரிக்கா அறிவித்துள்ள 25 சதவீத வரி என்பது இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக தோன்றினாலும், உண்மையான கவலை என்பது அமெரிக்கா அறிவித்துள்ள அபராதக் கட்டணத்தில்தான் இருக்கிறது.

அமெரிக்காவின் அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பின்னா்தான் தெளிவாகத் தெரியும். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி அமெரிக்க அதிபா் ட்ரம்பிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வரி, அபராதம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். மேலும் வரும் அக்டோபா் - நவம்பா் மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இருதரப்பு பேச்சுவாா்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க