பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா இன்று கன்னியாகுமரி வருகை
தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, வெள்ளிக்கிழமை (ஜூலை 25) கன்னியாகுமரி வருகிறாா்.
இது தொடா்பாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் துறை அமைச்சரும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான டி.ஆா்.பி. ராஜா, ஜூலை 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறாா்.
அவருக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் எனது தலைமையில் இரவு 8 மணியளவில் கன்னியாகுமரி, ஜீரோ பாயிண்டில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.