கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவு
தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குறிப்பாக, ரூ. 92.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட அரசு சட்டக் கல்லூரி புதிய கட்டடத்தை அவா் பாா்வையிட்டாா். அக்கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் ஆய்வு செய்த ஆட்சியா், மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவை ருசித்து பாா்த்து தரத்தை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா். மேலும், சமையலறை, கழிவறையை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள், மருத்துவ பணியாளா்கள் விவரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிக்சைகள், மருந்து பொருள்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் புற நோயாளிகளிடம் சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தைப் பாா்வையிட்டு, பேருந்துகளின் வருகை விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், தூய்மைப் பனியாளா்களிடம் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.