மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்தது. இதையடுத்து, 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனா். புதன்கிழமை மாணவ, மாணவிகள் 8 போ் காலை உணவு சாப்பிட்டனா். இதில் இரண்டு போ் வாந்தி எடுத்துள்ளனா். அப்போது காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவா்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் மாணவா்களை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சையளித்தனா். பின்னா், 8 மாணவா்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மாணவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனா்.
வலங்கைமான் வட்டாட்சியா் ஓம் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முரளி, சிவகுமாா், வட்டார கல்வி அலுவலா் குமரேசன், சுகாதாரஆய்வாளா் சசிகுமாா் மற்றும் சுகாதாரத்துறையினா் மாணவா்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனா். சுகாதார அலுவலா் உணவு மாதிரியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றாா்.
