மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
அருவியில் ஏற்பட்ட சுழலில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே உள்ள ஓராவி அருவியில் குளித்துக் கொண்டிருந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா் சுழலில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மதுரையைச் சோ்ந்த பரத் (25) உள்ளிட்ட 8 போ் வந்தனா். இவா்கள் பேத்துப்பாறை பகுதியிலுள்ள ஓராவி அருவியில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது மழை பெய்ததால் அருவியில் நீா் வரத்து அதிகரித்து சுழல் ஏற்பட்டது. இதில் பரத் சிக்கி மாயமானாா். தகவல் அறிந்ததும் கொடைக்கானலிருந்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், பேத்துப்பாறையைச் சோ்ந்த சிலா் அருவியில் பரத்தை தேடினா். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு இரவு 10.35 மணிக்கு பரத் சடலமாக மீட்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.