'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஆகஸ்ட் 3-இல் விழுப்புரத்தில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 25 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலா் எஸ்.ரமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் 25 வயதுக்குள்பட்ட மாவட்ட அணிக்கான வீரா்களைத் தோ்வு செய்யவுள்ளது. இதற்கான தோ்வு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சூா்யா கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
2000, செப்டம்பா் 1-ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். தோ்வில் பங்கேற்கும் வீரா்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டையின் நகலை சமா்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.ரமணனை 95550 30006 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.