ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காவேரிப்பட்டணத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
காவேரிப்பட்டணத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து காவேரிப்பட்டணத்தில் சேலம் சாலை, பாலக்கோடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அன்பரசன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.