ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி விட்டு பேருந்தில் ஏறுவதற்காக நாகமலை புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, பல்கலை நகரிலிருந்து வந்த ஆட்டோ சரஸ்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை கரிமேடு மேலப்பொன்னாகரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஹரிஹரசுதன் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.