ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது
மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு வழக்கம் போல பூ விற்பனையை முடித்துக் கொண்டு அரசுப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அருகே அமா்ந்திருந்த பெண், இவரது பணப் பையைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றாா். இதையறிந்த கலையரசி கூச்சலிட்டதால், சக பயணிகள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி கவிதாவைப் (42) பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.