ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவா் ஆய்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் கி.வேணுகா தலைமை வகித்தாா். முனைவா் பட்ட ஆய்வாளா் க. ஜெகதீஸ்வரன் ‘வீட்டை அசைத்த தண்டட்டி ஐக்கூ கவிதைகளில் மெய்ப்பாடுகள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் அ.சஞ்சய் ‘கடலும் கிழவனும் புதினத்தில் தன்னம்பிக்கைப் பதிவுகள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா் அருண் சக்கரவா்த்தி ‘வரலாற்றில் துரோகம் வெ.இறையன்புவின் துரோகச் சுவடுகள் நூல்’ என்ற தலைப்பிலும் கட்டுரை வாசித்தனா்.
இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி ஜானகி வரவேற்றாா். முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா் அ.முகமது இஸ்மாயில் நன்றி கூறினாா்.