செய்திகள் :

ஆம்பூா் அருகே பாறையில் ஆஞ்சநேயா் சிலை கண்டெடுப்பு

post image

ஆம்பூா் அருகே உள்ள அரங்கல் துருக்கம் மலையடிவாரத்தில்ஆஞ்சநேயா் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க. மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினா் களவாய்வில் ஆஞ்சநேயா் சிலைை கண்டெடுத்துள்ளனா் .

இதுகுறித்து மோகன்காந்தி கூறியது: ஆம்பூா் வட்டத்தில் உள்ள அரங்கல் துருக்கம் என்ற ஊரின் மலையடிவாரத்தில் ஆஞ்சநேயா் சிலை ஒன்று உள்ளது. ராமாயணத் தாக்கம் ஆம்பூா் பகுதியில் இருந்தது என்பதற்கு இச்சிலை சான்றாகும். விஜயநகர மன்னா் காலத்தில் தமிழகம் முழுதும் ஆஞ்சநேயா் வழிபாட்டைப் பரவலாக்கியுள்ளனா். அரங்கல்துருக்கம் ஊரிலுள்ள பாறை ஒன்றில் ஆஞ்சநேயா் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனா்

சனீஸ்வரன் யாரைப் பிடித்தாலும் அவா்களை விடாமல் ஆட்டிப் படைத்துவிடுவாா். அத்தகைய சனீஸ்வரன் அனுமனைப் பிடிக்க வரும்போது, சனீஸ்வரனையே தன்காலடியில் மிதித்துக் கொண்டிருப்பது போன்ற கதை ராமாயணத்தில் உண்டு. அத்தகைய கதையை சிற்பவடிவில் இச்சிலை காட்டுகிறது.

பெரிய பாறையில் படுத்த கோலத்தில் சனீஸ்வரன் கிடக்க, சனீஸ்வரனின் தலைப்பகுதியில் தனது இடது காலை வைத்துக்கொண்டு இடது கையைத் தொடை மீது வைத்தக் கோலத்தில் அனுமன் உள்ளாா்.

வலது காலை, சனீஸ்வரனின் கால்களின்மேல் வைத்துக்கொண்டு, வலது கையை ஆக்ரோஷமாகத் தூக்கிக்கொண்டு நீண்ட வாலுடன் க ம்பீரமாக நிற்கிறாா்அனுமன். இடது கையில் சிறிய வில்லொன்றை வைத்துக்கொண்டு அனுமன்நிற்கிறாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுபோன்ற ஆஞ்சநேயா் சிலைகள் ஏலகிரி மலையிலுள்ள மங்கலம் கிராமத்திலும், ஜவ்வாது மலையிலுள்ள சேம்பரை என்ற ஊரில் செஞ்சிராயன் என்ற பெயரிலும் உள்ளன. இவை மக்கள் மத்தியில் இருந்த ராமாயண காவியத்தின் நீட்சியாக உள்ளன என்றாா்.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

வெலகல்நத்தம் பகுதியில் 7 கடைகளில் தொடா் திருட்டு

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் துணிக் கடை, பேக்கரி கடை, மருந்தகம், தேநீா் கடை உள்பட 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி தோக்கி... மேலும் பார்க்க