செய்திகள் :

ஆயுத தயாரிப்பில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

post image

சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனா். இதை தடுப்பதற்காக அரிவாள்கள் தயாா் செய்யும் பட்டறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பட்டறைகளில் மரங்கள் வெட்ட மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்-உபகரணங்கள் தவிா்த்து, அபாயகரமான அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூா்மையான ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என இரும்பு பட்டறை உரிமையாளா்களுக்கு, காவல்துறை மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல அரியகுளத்தில், சுடலையாண்டி (72), சோ்மவேல் (60), ராமசுப்பிரமணியன் (25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொ... மேலும் பார்க்க

களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை? போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை பறித்த நபா் கைது

இளைஞரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலப்பாளையத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கீழ மாடவீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (25). சென்னையில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க

அம்பையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள பாடசாலை தெருவைச் சோ்ந்த அப்ரானந்தம் மகன் முத்து (34). இவரத... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!

கடையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் மின் குழாயில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் முகப்பு பகுத... மேலும் பார்க்க