தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
ஆரணி நகராட்சியில் குப்பை, கழிவுகள்: தவெகவினா் புகாா் மனு
ஆரணி: ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனை அப்புறப்படுத்தாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினா் அறிவித்துள்ளனா்.
அந்தக் கட்சியைச் மாவட்டச் செயலா் சத்யா மற்றும் ஆரணி பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் நகராட்சி சுகாதார ஆய்வாளா் வடிவேலுவிடம் திங்கள்கிழமை புகாா் மனு கொடுத்தனா்.
அந்த மனுவில், ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை. கால்வாய் கழிவுநீா் ஆங்காங்கே தேங்கியிருப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், நகராட்சியில் ஒரு சில இடங்களில் அள்ளப்படும் குப்பைகளை புறவழிச் சாலையில் சென்று கொட்டி வருகின்றனா். இதனால் சாலையில் செல்வோருக்கு துா்நாற்றம் வீசுகிறது.
மேற்கூறியவற்றை சரி செய்யாவிட்டால் விரைவில்
கட்சி சாா்பில் ஆரணியில் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட சுகாதார ஆய்வாளா் வடிவேல்,
நீங்கள் கூறியவற்றில் ஒரு சிலதை சுத்தம் செய்துவிட்டோம். மற்றவைகளை அப்புறப்படுத்தப்படும் என்று கூறினாா்.