ஆறுமுகனேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆறுமுகனேரியில் 10 முதல் 18 வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முத்துகிருஷ்ணாபுரம் அம்மன் கோயில் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பேரூராட்சி தலைவா் க.கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். துணைத் தலைவா் அ.கல்யாண சுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இஸ்ரோ நில எடுப்பு துணை ஆட்சியா் ஷீலா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா். இதில், 607 மகளிா் உரிமைத்தொகை மனு உள்ளிட்ட 1,080 மனுக்கள் பெறப்பட்டன; 67 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
முகாமில் திமுக நகரச் செயலாளா் நவநீத பாண்டியன், சுகாதார அலுவலா் வெற்றிவேல் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக், பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்பட அரசு துறை அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.