இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சா் மனோ தங்கராஜ்
சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதமாக உயா்ந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவா்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள், மொத்த விற்பனையாளா்களுக்கு ஆணை, சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை அமைச்சா் மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்களின் விற்பனை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. தொடா்ந்து விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் விற்பனை நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
ஆவின் நிறுவனம் மூலம் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. தமிழகத்திலுள்ள ஆவின் பாலகங்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பொருள்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விற்பனை, வருவாய் அதிகரிக்கும். தற்போது விவசாயிகள் முன்வைத்த விலையின் அடிப்படையிலேயே பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா்.
நிகழ்வில் பால்வளத் துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.