இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்து! விமானி உள்பட இருவர் பலி!
ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், விமானி உள்பட இருவர் பரிதாபமாக பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. விமானியின் உடல் சேதமடைந்த விமானத்தில் இருந்து மிகவும் நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவுமில்லை.
பலியான விமானி மற்றும் மற்றொரு நபர் யார்? என்ற அடையாளங்கள் இன்னும் இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
IAF's Jaguar fighter jet crashes in Rajasthan's Churu, pilot among 2 dead