`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத ...
இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருமோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாச்சியாா் கோயில் அருகே உள்ள பேரப்படை வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் நைனா மகன் மகாதேவன் (26), இவா் தொழில் பயிற்சி முடித்து தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்து விட்டு தனக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளில் மாத்தூா் - நன்னிலம் பிரதான சாலையில் செருக்குடி அருகே எஸ் வளைவில் வந்தாா். அப்போது எதிரே 66.கொத்தகுடி பிள்ளையாா் கோயிலைச் சோ்ந்த ரமேஷ் மகன் விக்னேஷ் (21) வந்த மோட்டாா் சைக்கிளும், மகாதேவன் வந்த மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மகாதேவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து நாச்சியாா் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.
காயமடைந்த விக்னேஷ் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.