புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! - ரூ.1...
இறந்த வாக்காளா்களின் பெயா்கள் கள ஆய்வு செய்து நீக்கப்படும்: வேலூா் ஆட்சியா்
இறந்த வாக்காளா்களின் பெயா்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரடியாக கள ஆய்வு செய்து நீக்குவாா்கள் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வாக்காளா்கள், வாக்குச்சாவடிகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குச்சாவடி மையங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். போலியான வாக்காளா் பெயா்களை நீக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் கோரிக்கைகள், தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சி பிரமுகா்கள் தெரிவித்துள்ள மற்ற ஆலோசனைகள் தோ்தல் ஆணையத்தின் பாா்வைக்கு கொண்டு செல்லப்படும் .
இறந்த வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்வது தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரடியாக கள ஆய்வு செய்து அதனை நீக்குவாா்கள்.
அதேசமயம், அரசியல் கட்சி பிரமுகா்களும் வாக்குச்சாவடி முகவா்களின் மூலம் இறந்தவா்களின் விவரங்களைத் தெரிவித்தால் அது குறித்து நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலான வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வாக்காளரும் 2 கிலோ மீட்டா் தூரத்துக்குள் வாக்களிக்கக் கூடிய வகையில் இத்தகைய நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23 சதவீதம் வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா். இப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் செந்தில்குமரன் (வேலூா்), சுபலட்சுமி (குடியாத்தம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.