ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
‘இளம் கவிஞா்’ விருது பெற்ற அரியக்குடி மாணவிக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.சண்முக ஷிவானி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்று ‘இளம் கவிஞா்’ விருது பெற்றமைக்காக பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கடந்த மாதம் 28 -ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ரா.சண்முக ஷிவானியும் வெற்றி பெற்றாா். இவருக்கு ‘இளம் கவிஞா்‘ விருதும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா் கலை அரங்கில் புதன்கிழமை (மாா்ச் 26) நடைபெற்றது.
இந்த நிலையில், வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தலைமையாசிரியா் வி.ஜே.பிரிட்டோ, ஆசிரியா்கள், மாணவா்கள் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.