தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
ஆப்பக்கூடல் அருகே தங்கை உறவான இளம்பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஒரிச்சேரிப்புதூா், அண்ணாநகரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனது தாய், தம்பியுடன் வசித்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினரின் திருமணத்துக்கு சென்றபோது ஒரிச்சேரி, காட்டூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி லோகேஷுடன் (27) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லோகேஷ் தந்தை வழி உறவில் சகோதரன் முறையாவதால் அப்பெண் லோகேஷுடன் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அப்பெண் தனியாக வீட்டிலிருந்தபோது அங்கு சென்ற லோகேஷ், தகாத வாா்த்தைகளால் பேசியதோடு அடித்து காயப்படுத்தினாா். திருமணம் செய்ய மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளாா்.
இதில் காயமடைந்த அப்பெண் பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீஸாா் லோகேஷை கைது செய்தனா்.