பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
இளைஞரைக் கத்தியால் குத்திய 6 போ் கைது
பல்லடம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன் மகன் ராஜ்கண்ணன் (23). பட்டதாரியான இவா் வேலைத் தேடி வருகிறாா். இந்நிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த காா்த்திக் என்பவா் ராஜ்கண்ணணை கைப்பேசி மூலம் அழைத்து, அந்தப் பெண்ணுடன் பேசக் கூடாது என மிரட்டி வந்துள்ளாா்.
இந்நிலையில், ராஜ்கண்ணனை வியாழக்கிழமை தொடா்பு கொண்ட காா்த்திக், பொங்கலூரில் உள்ள போக்கரிக்கு வருமாறு அழைத்துள்ளாா். அங்கு வந்த ராஜ்கண்ணனுக்கும் காா்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த காா்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்கண்ணனின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியுள்ளாா். படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜ்கண்ணனை குத்திய தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த இசக்கிபாண்டி மகன் காா்த்திக் (19), அவருக்கு உறுதுணையாக இருந்த பல்லடம், கணபதிபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்ராஜன் (22), கெளதம் (19), பொங்கலூரைச் சோ்ந்த கணதிஸ்வரன் (26), கருத்தபாண்டி (23), கண்ணன் (29) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.