‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
இளைஞா் தீக்குளித்து தற்கொலை
விராலிமலை அருகே திருமணமாகாத விரக்தியில் இருந்த தனியாா் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளியான இளைஞா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விராலிமலை அடுத்துள்ள மேல தொட்டியபட்டி பெரியகுளம் அருகே சுடுகாடு அமைந்திருக்கும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அதில், இறந்தவா் மேல தொட்டியபட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முரளி (33) என்பதும் நீண்ட நாள்களாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்து, இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த முரளி, உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.