மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குழிபிறையிலுள்ள குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருமயம் அருகே குழிபிறை பேருந்து நிறுத்தம் பகுதியில் வசித்து வருபவா் ஐஸ்வா்யா. இவரது மகன் துருவாமித்திரன் (6). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன்.
திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்த துருவாமித்திரன் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பெற்றோா்கள், உறவினா் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனா். தொடா்ந்து, பனையப்பட்டி காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் குழிபிறை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்புத் துறையினா், சடலத்தை மீட்டனா். விசாரணையில் அது காணாமல் போன சிறுவன் துருவாமித்திரன் சடலம் என தெரியவந்தது.
புகாரின்பேரில், பனையப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.