மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
சூரிய ஒளி மின் சக்தி ஆலையை அகற்றக்கோரி முற்றுகை: 27 போ் கைது
சூரிய ஒளி மின் சக்தி ஆலையை அகற்றக்கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியினா் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் லெக்கனாப்பட்டி, விளாப்பட்டி, நாங்குடிப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களை ஏமாற்றி அபகரித்து தொடங்கப்பட்டுள்ள தனியாா் சூரியஒளி மின்சக்தி ஆலையை அகற்றக் கோரியும், இதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியும் கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அரசு மகளிா் கல்லூரி அருகிலிருந்து ஊா்வலகமாக வந்து மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் க.சி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் வீ. வீரக்குமாா் முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பிய அக்கட்சியினா் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.