தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம...
ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்
ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கோவை வந்தடையும் ஈரோடு - கோவை தினசரி ரயில் (66601) ஜூன் 8-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு கோவை ரயில் நிலையத்தை 10.10 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.